வெள்ளி, 21 மார்ச், 2014

சின்ன சின்ன கூடுகட்டி

குரல்கள் : மேஜர் சிட்டு, சுகுமார்

யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது.

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்
எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்
ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்
பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்
பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக